நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
19 சொகுசு ரக வாகனங்களை சுங்கத்திடம் ஒப்படைக்குமாறு உத்தரவு!
மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் தரவு கட்டமைப்பிற்குப் போலி தகவல்களை வழங்கிப் பதிவைப் பெற்றதுடன் சுங்கத்திற்கு உரிய வரிப் பணத்தைச் செலுத்தாது நாட்டிற்குக் கொண்டு வரப்பட்ட 19 சொகுசு ரக வாகனங்களை விசாரணைகளுக்காகச் சுங்கத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கையூட்டலுக்கு எதிரான விசாரணை ஆணைக்குழுவின் சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை மனுவை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

