டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
2024 இல் உயர்தர பரீட்சை எழுதியவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகள் இன்றிரவு வெளியாகும் எனப் பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி https://www.doenets.lk/ எனும் இணையத்தளத்திற்குப் பிரவேசிப்பதன் மூலம் பரீட்சை பெறுபேறுகளைப் பார்வையிட முடியும்.
2024 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை 2,312 பரீட்சை மத்திய நிலையங்களில் நடைபெற்றது.
அனர்த்த நிலைமையின் காரணமாக அதன் நேர அட்டவணையில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன.
2024 ஆம் ஆண்டில் 333,185 பேர் உயர்தர பரீட்சைக்குத் தோற்றுவதற்குத் தகுதி பெற்றிருந்ததுடன், அவர்களில் 253,390 பேர் பாடசாலை பரீட்சார்த்திகளாவர்.
அத்துடன் 79,795 தனிப்பட்ட பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.