உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…
2025 வரவு செலவு திட்டத்திற்கு சபாநாயகரின் சான்றிதழ்

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கு சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்கிரமரத்ன தனது சான்றிதழை பதிவு செய்துள்ளார்.
இதன்படி, 2025 ஆம் ஆண்டின் 03 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டமாக இந்த ஒதுக்கீட்டுச் சட்டமூலம் அமுலுக்கு வரும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வேலை நிறுத்த சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று (21) நடைபெற்றது.
ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி, 2025 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 114 மேலதிக வாக்குகளால் நேற்று (21) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.