2025 IPL இல் தலைமைத்துவ மாற்றத்தோடு களம் காணும் அணிகள்.

2025 இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகள் வரும் மார்ச் 22 முதல்மே 25 வரை நடைபெறவுள்ளது. இந்தபோட்டியில் மொத்தம் 10 அணிகளின் பங்கேற்கின்றன.

இந்த 10 அணிகளில், 9 அணிகள் இதுவரை தங்கள் அணித் தலைவர்களை அறிவித்துள்ளன.

அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டனாக சுப்மன் கில்லும், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த முறை, பஞ்சாப் கிங்ஸ் அணியை, கடந்த சீசனில் கொல்கத்தா அணியை ஐபிஎல் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற ஷ்ரேயாஸ் ஐயர் வழிநடத்துகிறார்.

மேலும், வழக்கம்போல், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக சஞ்சு சாம்சனும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை ரஜத் படிதர் வழிநடத்துவார்.

கடந்த ஆண்டு பெங்களூரு அணியை பிளெசிஸ் வழிநடத்தினார்.

மேலும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனாக அஜிங்க்யா ரஹானேவும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பண்ட்டும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இருப்பினும், டெல்லி கெபிடல்ஸ் அணி இன்னும் தனது கேப்டனை அறிவிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *