டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
250 ரூபாவை நெருங்கும் தேங்காயின் விலை – NO சம்பல் NO புட்டு NO ரொட்டி

நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை மீண்டும் கிடு கிடு என அதிகரித்துள்ளது.
ஒரு தேங்காய் 240 ரூபாவிற்கும் அதிகமான விலையில் விற்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த சில நாட்களாக 180 – 200 ரூபாவிற்கு இடைப்பட்ட விற்பனை செய்யப்பட்ட தேங்காய் மீண்டும் 220 ரூபா முதல் 240 ரூபாவிற்கும் அதிகமாக விலையில் விற்பனை செய்யப்படுகின்றது.
இதேவேளை, மே மற்றும் ஜூன் மாதங்களில் நாட்டில் தேங்காய் சாகுபடி அதிகரிக்கும் என்றும் அந்தக் காலப்பகுதியில் தேங்காயின் விலை குறையலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தினால் சந்தையில் தேங்காய் மற்றும் மரக்கறிகளின் விலைகளும் சடுதியாக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனால் சிறிய கடைகள் முதல் பெரிய விடுதிகள்வரை சில உணவிற்கு தேங்காய் பூ, தேங்காய் பால் பயன்படுத்துவதை நிறுத்தியுள்ளனர்.
மேலும் வீடுகளிலும் புட்டு,ரொட்டி, தோசை என்பன தேங்காய் சம்பல் இல்லாமல் வேற்று உப உணவுகளுடன் உண்ணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.