நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை அறிவித்த உலக வங்கி
இலங்கையில் தொழில் உருவாக்கம் மற்றும் தனியார் துறை வளர்ச்சிக்கான 1 பில்லியன் டொலர் பெறுமதியான 3 ஆண்டு நிதியிடல் திட்டத்தை உலக வங்கி அறிவித்தது.
வேலைவாய்ப்பு மற்றும் முதலீட்டுக்கு அதிக வாய்ப்புகள் உடைய துறைகளான எரிசக்தி , விவசாயம், சுற்றுலா மற்றும் பிராந்திய அபிவிருத்தியை இலக்காகக் கொண்டு உலக வங்கி இதனை அறிவித்துள்ளது.
இது தொடர்பில் உலக வங்கி வௌியிட்டுள்ள அறிக்கையை கீழே காணலாம்.


