நியூசிலாந்தில் நேற்று மாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவானது. நியூசிலாந்தின் இன்வெர்கார் நகரில் இருந்து 300 கி.மீ. தொலைவில் உள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தால் வீடுகள் குலுங்கியதால் மக்கள் அச்சமடைந்து வீட்டைவிட்டு சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை.
5 நாட்களில் வீர தீர சூரன் படம் செய்துள்ள வசூல்

கடந்த வாரம் விக்ரம் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் வீர தீர சூரன். இயக்குநர் அருண்குமார் இயக்கத்தில் உருவான இப்படத்தை HR Pictures தயாரித்திருந்தனர்.
ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தில் துஷாரா விஜயன், எஸ்.ஜே. சூர்யா மற்றும் சுராஜ் ஆகியோர் நடிக்க ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருந்தார்.
சியான் விக்ரம் ரசிகர்களுக்கு செம விருந்தாக வீர தீர சூரன் திரைப்படம் அமைந்தது. ஆனால், சில இப்படத்திற்கு கலவையான விமர்சனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில், உலகளவில் இப்படம் 5 நாட்களில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வீர தீர சூரன் திரைப்படம் உலகளவில் 5 நாட்களில் ரூ. 32 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.
இது இப்படத்திற்கு கிடைத்துள்ள சுமாரான வசூல் தான் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இனி வரும் நாட்களில் இப்படத்திற்கான வசூல் எப்படி இருக்கப்போகிறது என்று.