இலங்கை வேகப்பந்து வீச்சாளர் துஸ்மந்த சமீர (Dushmantha Chameera ) நேற்று(ஏப்ரல் 29) நடைபெற்ற IPL இன் 48வது போட்டியின் போது DC சார்பாக ஒரு அற்புதமான பிடியெடுத்து KKR துடுப்பாட்ட வீரரை ஆட்டமிழக்கச் செய்துள்ளார். லோங்- லெக்கில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த சமீர, இடதுபுறமாக முழு நீளமாக பாய்ந்து இந்த பிடியை எடுத்தார். முன்னதாக நான்கு நாட்களுக்கு முன்னர் இலங்கை வீரரான கமிந்து மெண்டிசும் இவ்வாறான ஒரு சிறப்பான பிடியை எடுத்து எல்லோரையும் ஆச்சரியப்படுத்தியிருந்தார்.
உக்ரைன் அதிபரை வெள்ளை மாளிகையிலிருந்து வெளியேற்றிய டிரம்ப்

உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இடையேயான சந்திப்பு வெள்ளை மாளிகையில் நடைபெற்றது.
உக்ரைனின் கனிம வளங்கள் தொடர்பான உடன்படிக்கையில் கைச்சாத்திடவும், ரஷ்யாவுடனான முரண்பாடுகளை தீர்ப்பதற்கான வழிவகைகள் குறித்து கலந்துரையாடவும் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், அந்த சந்திப்பில் இரு தரப்பினருக்கும் இடையே காரசாரமான வார்த்தைப் பரிமாற்றம் நடந்துள்ளது.
இதன்போது உக்ரைனுக்கு அமெரிக்கா அதிக ஆதரவை வழங்க வேண்டும் என்று உக்ரைன் அதிபர் கூறியுள்ள நிலையில் ,உக்ரைன் தொடர்பில் அமெரிக்கா பாரிய பொறுப்பை ஏற்பது ஏற்புடையதல்ல என அமெரிக்க ஜனாதிபதி தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பின் போது உடனடியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுமாறு உக்ரைன் அதிபரிடம் டிரம்ப் தெரிவித்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன