நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட மிகப்பெரிய மீன்பிடிக்கப்பலின் முன்னோட்ட பயணம்.
இலங்கையின் உற்பத்தியாளர்களின் அறிவு, திறன் என்பவற்றால் நவீன தொழில்நுட்பத்துடன் Dhanusha Marine நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட “maanya mooya” எனும் பெயர் கொண்ட கப்பலுக்கான அதற்கான முன்னோட்ட பயணம் இடம்பெற்று , சோமாலியாவிலுள்ள அரச நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரும் கலந்துகொண்டார்.
இலங்கையில் உற்பத்தி பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கான பயணத்தில் இது முக்கிய மைல்கல்லாகும்.




