அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
முன்னை நாதருக்கு உற்சவம் ஆரம்பம்.

பஞ்ச ஈஸ்வரங்களில் முதன்மை பெற்றதும் 51 சக்தி பீடங்களில் ஒன்றுமான சிலாபம் முன்னேஸ்வரம் ஸ்ரீ வடிவாம்பிகா சமேத ஸ்ரீ முன்னை நாதஸ்வர சுவாமி ஆலயத்தின் கொடியேற்றத் திருவிழா இன்று(மார்ச் 4) செவ்வாய்க்கிழமை சுப வேளையில் ஆலயப் பிரதம குரு தலைமையில் இடம்பெற்றது.