உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
மூடப்பட்ட யால தேசிய பூங்காவின் சாலைகள் மீண்டும் திறப்பு.

யால தேசிய பூங்காவில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்தமையினால் தற்காலிகமாக மூடப்பட்ட சில சாலைகள் இன்று (மார்ச் 05) முதல் மீண்டும் திறக்கப்படும் என வனவிலங்கு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
இன்று (மார்ச் 05) பிற்பகல் 2மணி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு சாலைகள் மீண்டும் திறக்கப்படும் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக பெய்த கனமழையால் யால தேசிய பூங்காவின் சாலை அமைப்பிற்கு ஏற்படும் சேதத்தைக் குறைப்பதற்கும், அதன் மூலம் அதன் சுற்றுச்சூழல் அமைப்பில் ஏற்படும் பாதிப்பைக் குறைப்பதற்கும், மார்ச் 1 ஆம் தேதி முதல் யால தேசிய பூங்காவை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதில் ஒருசில சாலைகளை மட்டும் தற்போது திறப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.