அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வவுணதீவில் வீட்டில் உறங்கியநிலையில் குழந்தை இறப்பு.

மட்டக்களப்பு- நாவற்காடு கிராமத்தில் வீட்டில் தாயுடன் உறக்கத்திலிருந்த குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக வவுணதீவு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிறந்து மூன்று மாதமான குழந்தை நேற்று (மார்ச் 9) இரவு தாயாரிடம் பால் அருந்திவிட்டு தாவுடனே உறங்கியுள்ளது. இன்று (மார்ச் 10) அதிகாலை குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக எழுப்பிய போது குழந்தை மூச்சு சுவாசம் இல்லாமல் இருந்துள்ளது.
உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, குழந்தை முன்னரே இறந்து விட்டதாக வைத்தியர் தெரிவித்துள்ளார்.
வவுணதீவு பொலிஸாரின் வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை சம்பவ இடத்திற்கு சென்று மரண விசாரனைகளை மேற்கொண்டு, சடலத்தை பிரேத பரிசோதனைக்கு பஅனுப்பிவைத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பக மேலதீக விசாரணைகள் வவுணதீவு பொலிசாரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.