இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியசாலை விடுதியில் கடந்த திங்கட்கிழமை (மார்ச் 10) இரவு பெண் வைத்தியரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் இன்று (மார்ச் 12) கல்னேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பெண் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமையை கண்டித்தும் மற்றும் சந்தேக நபரை உடனடியாக கைது செய்யுமாறு கோரியும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்பரிப்பில் ஈடுப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.