இன்று (13) உலக சிறுநீரக தினமாகும் இந்த ஆண்டுக்கான கருப்பொருளாக ‘உங்கள் சிறுநீரகங்கள் சரியாக உள்ளதா? – முன்கூட்டியே கண்டறிதல், சிறுநீரக ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல்’.என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் சுமார் 10% பேர் சிறுநீரகம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியர்கள் குறிப்பிடுகின்றனர். மேலும், 2020 இல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் 164,000 பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் (CKD) பாதிக்கப்பட்டுள்ளனர் என்று தெரியவந்துள்ளது.
மட்டக்களப்பு உணவு விடுதிகள், உணவு தயாரிப்பு நிலையங்களில் திடீர் சோதனை

மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள உணவு விடுதிகள் மற்றும் உணவு தயாரிப்பு நிலையங்களில் நேற்று (மார்ச் 11) மாலை பொது சுகாதார பரிசோதகர்களினால் திடீர் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாநகர சபைக்குட்பட்ட மாமாங்கம் பொது சுகாதார பிரிவு மற்றும் இருதயபுரம் பொது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு ஆகியவற்றிலே இந்த அதிரடி சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் அ.முரளீஸ்வரனின் ஆலோசனையின் கீழ் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் உதயகுமாரின் வழிகாட்டலின் கீழ் மாமாங்கம் பொது சுகாதார பரிசோதகர் ரி.பகீரதன் மற்றும் இருதயபுரம் பொது சுகாதார பரிசோதகர் என்.கருணாகரன் ஆகியோர் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குழுவினால் இந்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
இதன்போது மாமாங்கம் பொது சுகாதார பிரிவில் சுமார் 10 உணவு விற்பனை நிலையங்கள், உற்பத்தி நிலையங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் மூன்று உணவு விற்பனை நிலையங்களுக்கு எதிராக ஐந்து வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டதோடு இருதயபுரம் பொது சுகாதார பிரிவில் சுமார் 23 உணவு விற்பனை நிலையங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்கள் சோதனைக்குட்படுத்தப்பட்ட நிலையில் 13 விற்பனை நிலையங்களுக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இதன்போது, உணவு உற்பத்திகளுக்காக பயன்படுத்தக்கூடிய புற்றுநோயினை ஏற்படுத்தக்கூடிய பொருட்களும், பாவனைக்குதவாத பொருட்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

