இலங்கை, கொழும்பு, 2026 மே 26: DSI Samson குழுமத்தின் ஒரு அங்கமான Samson Trading Company (Pvt) Ltd. நிறுவனம், மாலபேயில் தனது புதிய TVS காட்சியறையை மே 23 ஆம் திகதி திறந்து வைத்ததன் மூலம், TVS Lanka (Pvt) Ltd. நிறுவனத்துடனான தனது உத்தியோகபூர்வ விநியோகஸ்தர் சேவையை ஆரம்பித்துள்ளது. இக்கூட்டாண்மையானது, Samson Trading Company (Pvt) Ltd. நிறுவனம் மோட்டார் சைக்கிள் துறைக்குள் நுழைவதற்கான ஒரு மூலோபாய விரிவாக்கத்தைக் குறிப்பதுடன், DSI Samson…
அஸ்வெசும உதவித்தொகை வங்கிகளில்.
அஸ்வெசும மூலம் ஏழ்மையான குடும்பங்களில் இதுவரை உதவித்தொகை பெற்று வந்த முதியவர்களுக்கு இம்மாதம் 20 ஆம் திகதி 3,000 ரூபா வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் வங்கி கணக்குகளில் பெற்றுக்கொள்ள முடியாதவர்கள் தபால் நிலையங்கள் மற்றும் துணை தபால் நிலையங்கள் மூலம் குறித்த பணத்தைப் பெறமுடியும் என தேசிய முதியோர் செயலகம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல், நலன்புரி நன்மைகள் சபை, இலங்கை வங்கிகளுக்கு இடையேயான கொடுப்பனவு முறை(SLIPS) தொடர்பான அமைப்பின் மூலம் நலன்புரி குடும்பங்களில் 70 வயதுக்கு மேற்பட்ட நபர்களின் கணக்குகளில் நேரடியாக உதவித்தொகைகளை வரவு வைக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.