டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
அரசியல் களத்தை ஆட்டிப்படைக்கும் பட்டலந்த அறிக்கை – இன்று ரணில் சொல்லப்போவது என்ன?

சென்றவாரம் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை, சபைத் தலைவர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
அந்த அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மீதும் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க சுட்டிக்காட்டினார்.
இதனை மையப்படுத்தி முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (மார்ச் 16) விசேட உரையொன்றை ஆற்றவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையை எதிர்காலத்தில் சட்டமா அதிபருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதுடன் பட்டலந்த அறிக்கை தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவை, கொள்கை முடிவை எடுத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆணைக்குழு அறிக்கை தொடர்பான மேலதிக நடவடிக்கைகளுக்கான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குவதற்காக ஒரு சிறப்பு குழுவை நியமிக்கவும் ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.