கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
தமிழ் அரசியல் கட்சிகள் ஓரணியாக திரளவேண்டும்…
அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் ஓரணியாக திரண்டு தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க முன் வர வேண்டும் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ. ஆனந்த சங்கரி தெரிவித்துள்ளார்.
இன்று (மார்ச் 19) கிளிநொச்சியில் அமைந்துள்ள தமிழர் விடுதலைக் கூட்டணியின் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகசந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“தந்தை செல்வா, ஜி. ஜி பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர் உருவாக்கிய கட்சிதான் தமிழர் விடுதலைக் கூட்டணி இது. நீண்டகால அரசியலில் இருக்கும் நான் தூய்மையான அரசியலை முன்னெடுத்த இருக்கின்றேன். நாங்கள் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடவில்லை. அதற்கான பணமும் எங்களிடம் இல்லை. நடைபெற உள்ள தேர்தல் தான் முக்கியமான ஒரு தேர்தலாக அமையும்.
இப்போது வெளியிடங்களில் இருந்து வந்து கோடிக்கணக்கிலே பணத்தை கொட்டி தீர்த்து இந்த தேர்தலில் போட்டியிடுகின்றார்கள்.
என்னுடனும் பேரம் பேசியதாக கூட சொல்லுகின்றார்கள். என்னிடம் இவ்வாறு தேர்தலில் வீசி எறிய பணம் இல்லை.
ஆனால் அரசியலுக்காக இல்லாமல் அனைவருமே ஒன்று திரண்டு ஒரணியிலிருந்து தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்க முன் வர வேண்டும்” என அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறினார்.