கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
களனி பல்கலைக்கழக மூத்த விரிவுரையாளர் விபத்தில் பரிதாபமாக உயிரிழப்பு
களனிப் பல்கலைக்கழகத்தின் தத்துவத் துறையின் உளவியல் பிரிவின் தலைவரும் மூத்த விரிவுரையாளருமான என்.டி.ஜி. கயந்த குணேந்திரா வே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார்.
தனது மூன்று பிள்ளைகள் மற்றும் மனைவியுடன் யாழ்ப்பாணத்திலிருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது, மத்திய அதிவேக நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கியுள்ளார்.
நேற்றிரவு (மார்ச் 18) குருநாகலிலிருந்து மீரிகம நோக்கி பயணித்த கயந்தவின் வான் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த லொறியின் பின்புறம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த அவரது மனைவி மற்றும் மூன்று பிள்ளைகள் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மீரிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.