உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி, தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேற்சை குழுக்கள் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு குறைந்தபட்சம் 35 நாட்கள் வழங்கப்படும். இதற்கமைய வேட்புமனுக்கள் தாக்கல்…
நாடு திரும்பினார் ஜனாதிபதி.

ஜனாதிபதி கடந்த 10ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு 3நாள் உத்தியோகபூர்வ வியத்தை மேற்கொண்டார். இந்த வியத்தின் போது பல்வேறுபட்ட முதலீட்டாளர்களோடு தனிப்பட்ட முறையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டதோடு, “எதிர்கால அரசாங்கங்களின் வடிவம்” என்ற தொனிப்பொருளில் டுபாயில் (Dubai) நடைபெற்ற 2025 உலக உச்சி மாநாட்டிலும் (World Government Summit) கலந்துகொண்டு உரையாற்றினார்.
மேலும் புல்மன் நகர மையத்தில் நடைபெறும் சமூக வேலைத்திட்டம் ஒன்றில் பங்கேற்றதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்த உத்தியோகபூர்வ பயணத்தில் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் பயணமாகியிருந்தார்.