உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குப்பதிவு இன்று (28) மூன்றாவது நாளாக இடம்பெறவுள்ளது. கடந்த 24 மற்றும் 25ஆம் திகதிகளில் தபால் வாக்குகளை பதிவு செய்ய முடியாதவர்களுக்குக்கு இன்றும் (25) நாளையும் (29) தபால் வாக்குகளை பதிவு செய்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அரச நிறுவனங்கள், பொலிஸ், முப்படை, பாடசாலை, கூட்டுத்தாபனங்கள் மற்றும் நியதிச்சட்ட நிறுவனங்கள் உட்பட அனைத்து நிறுவனங்களிலிருந்தும் தபால் மூல வாக்காளர்கள் மேற்படி நான்கு நாட்களில் தங்களது தபால் மூல…
அதிவேக வீதியில் விபத்து இருவர் காயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கௌனிகம பகுதியில் இன்று (01) காலை இடம்பெற்ற விபத்தில் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஒரு பாரவூர்தி இரண்டு வேன்கள் மற்றும் ஒரு மகிழுந்து ஒன்றோடொன்று மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தினால் அதிவேக நெடுஞ்சாலையில் போக்குவரத்திற்கு எந்தத் தடையும் இல்லை எனத் தெரியவந்துள்ளது.
காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக இல்லை என காவல்துறையினர் தெரிவித்தனர்.