The new product stack brings together Binance AI, Binance AI Pro, and Binance Agent OS to help people understand financial information, turn ideas into strategies, and build on Binance During a livestreamed event held recently, Binance Co-CEO Richard Teng and VP of Product Jeff Li unveiled Binance Intelligence, an AI product stack built into the…
நாட்டின் இன்றைய வானிலை
தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்றைய தினம் (02) அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மத்திய, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ.க்கு மேல் கனமழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேற்கு, சபரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருணாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களால் ஏற்படும் அபாயங்களை குறைப்பதற்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.