தொடரை கைப்பற்றிய இலங்கை.

ஆர்.பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் இன்று (வெப்ரவரி 14) நடைபெற்ற அவுஸ்ரேலியாவுக்கு எதிரான இரண்டாவதும் கடைசியுமான சர்வதேச ஒருநாள் கிரிக்கட் போட்டியில் அபாரமாக விளையாடி இலங்கை 174 ஓட்டங்களால் வெற்றியீட்டி இரண்டு போட்டிகள் கொண்ட தொடரையும் இலங்கை கைப்பற்றிக்கொண்டது.

2016 ஆண்டில் 82 ஓட்டங்களால் அவுஸ்ரேலியவை வெற்றிகொண்ட இலங்கை 8வருடங்களுக்கு பின் மிகப்பெரிய ஓட்ட வித்தியாசத்தில் மா பெரும் வெற்றியை ஒருநாள் போட்டிகளில் பெற்றுள்ளது. அதேநேரம் சாம்பியன் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முன்னாள் சாம்பியனாக பங்குபெற்றவுள்ள அவுஸ்திரேலிய அணிக்கு இந்த தொடரின் தோல்வி ஏமாற்றமேயாகும்.

நீண்டநாட்கள் பின் இலங்கையணியின் நிதானமான மற்றும் முனைப்புடனான ஆட்டத்தை காணக்கூடியதாக இருந்தது. குறிப்பாக அணித்தலைவர் சரித்தின் அதிரடியான அரைச்சதம், குசல் மெண்டிஸின் நிதானமான சதம், வனிந்து ஹசரங்க, அசித்த பெர்னாண்டோ,துனித் வெல்லாலகே ஆகியோரின் முனைப்புடன் இலக்கை நோக்கிய பந்துவீச்சு என்பன இலங்கையின் இந்த அபார வெற்றிக்கு காரணமாகின.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை அணி 50 ஓவர்களில் 281 ஓட்டங்களைக் 4 விக்கெட்களை இழந்து குவித்தது.

282 என்கின்ற வெற்றி இலக்கோடு துடுப்பெடுத்தாட ஆரம்பித்த அவுஸ்திரேலியா அணி 24.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது.

இந்த தொடரின் நாயகனாக சரித் அசலன்கவும், ஆட்ட நாயகனாக குசல் மெண்டிஸும் தெரிவுசெய்யப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *