Power World Gyms, Sri Lanka’s leading fitness brand with over 30 years of promoting healthier lifestyles, has partnered with Kings Hospital Colombo as its Official Wellness Partner. This collaboration brings together expertise in fitness and healthcare to introduce a dedicated wellness programme for the hospital’s staff, supporting their physical and mental well-being. Through this partnership,…
திருகோணமலை அருள்மிகு பத்ரகாளி அம்பாள் ஆலய இரதோற்ஸவம்.
திருகோணமலையில் கம்பீரமும், அழகு நிறைந்தவளாய் அமர்ந்து பக்தர்களுக்கு அருள்வழங்கும் பத்ரகாளி அம்பாள் தேவஸ்தானத்தில் ஏப்ரல் 1ம் திகதி கொடியேற்றம் நிகழ்ந்து இன்று 10ம் திருவிழாவான இரதோற்ஸவம் இடம்பெறுகின்றது.
.
அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தான பூஜை தம்பபூஜை இடம்பெற்று 6.15 மணிக்கு விசேட அலங்காரங்களுடன் வசந்த மண்டப பூஜை இடம்பெற்றது.
காலை 8 மணிக்கு அடியார்களின் அரோகரா கோஷங்களுக்கு மத்தியில் மேள, தாள மங்கள இசையுடன் சிற்ப சாஸ்திர விதிகளுக்கு அமையப் பெற்ற அழகிய சித்திர தேரில் விநாயகரும் முருகனும் முன்னே வர அம்பாள் தனக்கென அமையப் பெற்ற அழகிய சித்திரத் தேரில் பவனி வந்து அடியார்களுக்கு காட்சி கொடுத்துலருகின்றாள்.
.மேலும் பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம் ஆரம்பமாகி அம்பாளுக்கு விசேஷ பூஜைகள் இடம்பெற்று சரியாக 6 மணிக்கு அம்பாளுக்கு மகா ரிஷப வாகனத் திருவிழாவும் , பச்சைமேனி அருட்காட்சியும் இடம்பெறவுள்ளது,
நாளை 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை தீர்த்தோற்சவம் இடம்பெறவுள்ளது.
பங்குனி உத்திரம் ஆகிய நாளை அதிகாலை 3 மணிக்கு மூலஸ்தான பூஜை, தம்ப பூஜை, வசந்தமண்டப பூஜைகள் நடைபெற்று அதிகாலை 5 மணிக்கு அம்பாள் புராதன பழமை வாய்ந்த சிம்ம வாகனத்தில் சமுத்திரக்கரைக்கு எழுந்தருளி சூரியோதயத்தில் தீர்த்தோற்சவம் இடம்பெறும்.
அன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு மூலஸ்தான பூஜையை தொடர்ந்து திருவூஞ்சல் இடம்பெறும். அதன்பின்னர் துவஜா அவரோகணம் என்று கூறப்படும் கொடியிறக்கம் இடம்பெறும்.
அதனைத் தொடர்ந்து அம்பாள் வெள்ளைத் திருமேனியாக திருப்பூந்தண்டிகையில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுத்தருள்வாள்.
மற்றும் ஏப்ரல் 12 ஆம் திகதி சனிக்கிழமை இரவு பூங்காவனத் திருவிழா விமர்சையாக இடம்பெறவுள்ளது. அம்பாள் பூங்காவன பந்தலில் எழுந்தருளி அடியார்களுக்கு அருள்பாலிக்கும் அவ்வேளையில் அம்பாளின் அருள் பெற அடியார்களை ஆலய பரிபாலன சபை அழைக்கின்றார்கள்.
