வௌவால்களில் காணப்படும் HKU5 எனும் கொரோனா வகை வைரஸ், சிறிய மரபணு மாற்றம் மூலமாகவே மனிதர்களில் பரவக்கூடிய ஆபத்தான நிலைக்கு மாறும் சாத்தியம் உள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. வொஷிங்டன் மாநில பல்கலைக்கழகம், கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனம், வடகரோலினா பல்கலைக்கழகம் ஆகியவற்றின் கூட்டாய முயற்சியில் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது. முக்கிய அறிவியல் இதழான நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் இதை வெளியிட்டுள்ளது. இந்த HKU5 வைரஸ், COVID-19 வைரசு போலவே மனித செல்களில் உள்ள ACE2 ஏற்பியைப் பயன்படுத்தக்கூடியதாகத் தெரிய வந்துள்ளது. இது…
பொலிஸ் நிலையங்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்.

பொலிஸ் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்படும் விருந்துபசாரங்கள் தொடர்பில் சகல பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, எதிர்வரும் தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு பொலிஸ் அதிகாரிகள் மற்றும் வர்த்தகச் சங்கத்தினரிடமிருந்து நிதி நன்கொடைகளைப் பெற்று பொலிஸ் நிலையங்களில் விருந்துபசாரங்களை ஏற்பாடு செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அதிகாரிகள் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளைப் பாராட்டும் விதமாக அவர்களுக்கு பரிசுகள் வழங்கக் கூடாது என பதில் பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வழங்கப்படும் பணத்தையோ அல்லது பரிசுகளையோ சிரேஷ்ட அதிகாரிகள் ஏற்கக்கூடாது.
இந்த அறிவுறுத்தல்களைப் பின்பற்றாத பட்சத்தில் ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய எச்சரித்துள்ளார்.