அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
எல்ல பகுதிக்கு பயணப்படும் சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

இராவணா எல்ல சரணாலயத்தின் ரொக் மலைத்தொடரில் ஏற்பட்ட தீ தற்போது கட்டுக்குள் பரவியுள்ளதால் எல்ல ரொக் மலைத்தொடரில் உள்ள பாறைகள் வெப்பமடைந்து, பாறைகள் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவி பணிப்பாளர் ஏ. எல். எம். உதய குமார தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பாறைகள் உருண்டு விழும் அபாயம் உள்ளதால்
எல்ல-வெல்லவாய வீதியில் பயணிக்கும் சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.