நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளினி பிரியங்காவிற்கு திருமணம் முடிந்தாச்சு.
விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை மிக கச்சிதமாக தொகுத்துவழங்கும் திறமையான தொகுப்பாளினியும், எப்போதும் துரு துரு என்றும் உறவு , நட்புக்கு முக்கியத்துவம் கொடுப்பவருமான பிரியங்கா தேஷ்பாண்டேக்கு கல்யாணம்.
வாழ்க்கையில் உண்மையான அன்புக்காக ஏங்கும் நபர் நான் என்று அடிக்கடி சொல்லுவதை நேர்காணலில் பார்த்திருக்கிறோம். இப்போதும் அவரின் அன்பை பெற்று அவர் ஏற்கும் அன்பைக்கொடுக்க மாப்பிள்ளை அமைந்தாச்சு.
லண்டனில் வசித்துவரும் இலங்கை தமிழரான வசி என்பவரை காதலித்து இரு வீட்டார் சம்மதத்துடன் இறையருளோடு திருமணம் இன்று(ஏப்ரல் 16) நடைபெற்றுள்ளது.
மாலை மாற்றி கெட்டி மேளம் ஒலிக்க தாலியும் கட்டியாச்சு. பிரியங்கா வசி தம்பதியினருக்கு எமது வாழ்த்துகள்.

தன்னுடைய கல்யாண புகைப்படங்களை பகிர்ந்த பிரியங்கா “Going to be chasing sunsets with this one(heart)” அப்பிடின்னு தன்னோட காதல் வெளிப்படுத்தி இருக்காங்க.




