இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
ரணிலின் முகத்தை பார்க்காதீர்கள், தலைக்குள் உள்ள மூளையை பாருங்கள் – ராஜித சேனாரத்ன

வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்றும் அவர் சில மாதங்களில் மீண்டும் ஜனாதிபதியாக தெரிவாகுவார் என்றும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டின் பொருளாதாரம் இப்போது சரிந்து கொண்டிருக்கிறது. பொருளாதாரத்தை மீண்டும் யாரால் கட்டியெழுப்ப முடியும் என்பது மக்களுக்குத் தெரியும்.
கோத்தபய இரவில் குழியில் விழுந்தார். பகலில் அனுர குழியில் விழுந்தார். காலையில் சஜித்துடன் விழத் தயாராக இருக்கும் மூளை உள்ளவர்கள் இலங்கையில் யாரும் இல்லை.
அப்படியானால் மக்கள் முன் உள்ள ஒரே தீர்வு ரணில் விக்ரமசிங்கவே. வீழ்ச்சியடைந்துள்ள நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கக்கூடிய ஒரே தலைவர் ரணில் விக்ரமசிங்கதான்.
நான் எப்போதும் சொல்வேன், ரணில் விக்ரமசிங்கவின் முகத்தைப் பார்க்காதீர்கள். அவரது தலைக்குள் இருக்கும் மூளையைப் பாருங்கள். அந்த மூளையால்தான் இந்த நாட்டை நெருக்கடியிலிருந்து கட்டியெழுப்ப முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.