டேவிட் பீரிஸ் குழுமம், அதன் சமூக நலக் குழுவின் மூலம், வட மாகாணத்தில் சமீபத்தில் மீள்குடியேற்றப்பட்ட பகுதியில் அமைந்துள்ள மயிலிட்டி வடக்கு கலைமகள் மகா வித்யாலயத்திற்கு முழுமையாக பொருத்தப்பட்ட கணினி ஆய்வகத்தை நன்கொடையாக வழங்கியுள்ளது. குழுவின் சமூக நலக் குழுவால் முழுமையாக நிதியளிக்கப்பட்ட இந்த முயற்சி, தற்போது பள்ளியில் பயிலும் 134 க்கும் மேற்பட்ட மாணவர்களின் டிஜிட்டல் கற்றல் தேவைகளை ஆதரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த மாணவர்களில் பலர் பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்தவர்கள், மேலும் அவர்களுக்கு போதிய…
14 இந்திய மீனவர்கள் விடுவிப்பு

இலங்கையிலிருந்து விடுவிக்கப்பட்ட 14 இந்திய மீனவர்கள் சென்னை திரும்பியுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தமிழகம் – இராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 3 மீனவர்கள் கடந்த மார்ச் 17ஆம் திகதி கச்சத்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.
பின்னர் அவர்கள் ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
தொடர்ந்து ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 11 மீனவர்கள் கடந்த மார்ச் 26 ஆம் திகதி கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு ஊர்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த இந்திய மத்திய மாநில அரசுகளின் பேச்சு வார்த்தைகளை
தொடர்ந்து இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 14 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் விடுதலை செய்யப்பட்ட 14 மீனவர்களும் கொழும்பில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்திய தூதரக வாயிலாக சென்னை விமான நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
சென்னை விமான நிலையம் சென்ற மீனவர்கள் அனைவரையும் தமிழக மீன்வளத்துறை அதிகாரிகள் வரவேற்று சொந்த ஊருக்கு தனி வாகனம் மூலம் அழைத்துச் சென்றதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன