தென்கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு (Yoon Suk Yeol) அந்நாட்டு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த காலத்தில் நாட்டில் இராணுவச் சட்டத்தைப் பிறப்பிக்க முயற்சி செய்ததோடு, கிளர்ச்சிக்குத் தலைமை தாங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டார். இந்த தேசத்துரோக நடவடிக்கைகளுக்காகவே அவருக்கு இந்த உச்சபட்ச தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது.
கிரிபாவ பொலிஸ் பிரிவின் தம்சோபுர பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவர் நேற்று (வெப்ரவரி 14) கைது செய்யப்பட்டுள்ளார்.
கிரிபாவா பொலிஸ் அதிகாரிகள் குழு ஒன்றுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நடத்திய சோதனையின் போது குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தம்சோபுர பகுதியைச் சேர்ந்த 54 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

