கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் உயிரிழப்பு
பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார்.
மேற்கு மாலமுல்ல பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நடைபெற்ற விருந்து ஒன்றின் போது, மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர், மேற்கு மாலமுல்ல பகுதியைச் சேர்ந்த 35 வயது நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் T-56 வகை துப்பாக்கி பயன்படுத்தப்பட்டதாக முதல்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹிரணை பொலிஸார் சந்தேக நபர்களைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மேலும், சம்பவத்தின் பின்னணி மற்றும் தாக்குதலின் நோக்கம் குறித்து விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.