இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழப்பு

திருகோணமலை – ஈச்சிலம்பற்று – சூரிய நகரில் மின்சாரம் தாக்கியதில் 29 மற்றும் 47 வயதான இரண்டு பேர் மரணித்தனர்.
காணி உரிமையாளரான 47 வயது நபர், வயலில் பொருத்தப்பட்டிருந்த யானைத் தடுப்பு மின் வேலியை சுத்திகரிப்பு செய்த போது மின்சாரம் தாக்கியுள்ளது.
அவரை மீட்க முற்பட்ட அவரது மகளின் கணவரான 27 வயதுடைய இளைஞரும் மின்சார தாக்கத்துக்கு உள்ளானார்.
பின்னர் அவர்கள் இருவரும் ஈச்சிலம்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.