நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
நாட்டில் தற்போது ஆஸ்துமா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார பிரிவினர் கூறுகின்றனர்.
உலகளவில் 100,000 பேரில் 3,340 பேருக்கு ஆஸ்துமா இருப்பதாக சுவாச நோய் வைத்திய நிபுணர் ஆஷா சமரநாயக்க தெரிவித்துள்ளார்.
உலகெங்கிலும் உள்ள இளைஞர்களிடையே ஆஸ்துமா பரவலாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
எதிர்வரும் 6 ஆம் திகதி உலக ஆஸ்துமா தினத்தை முன்னிட்டு அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடக சந்திப்பில் பங்கேற்று உரையாற்றிய போதே வைத்திய நிபுணர் இதனைக் குறிப்பிட்டார்.
“இன்ஹேலர்” சிகிச்சையானது பக்க விளைவுகள் இல்லாமல் ஆஸ்துமாவை மிகச் சிறப்பாக குணப்படுத்தும் ஆற்றலைக் கொண்டுள்ளது.
ஆஸ்துமா இருந்தாலும், இந்த நாட்டில் அது கண்டறியப்படாத நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர்” என்றார்.

