65 வயதுக்குட்பட்ட ஓய்வுபெற்ற சிறைச்சாலை அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பணியில் அமர்த்த சிறைச்சாலைத் துறை தீர்மானித்துள்ளது. முதலாம் மற்றும் இரண்டாம் நிலை ஜெயிலர்கள், சப்-ஜெயிலர்கள், ஜெய்லர் சார்ஜென்ட்கள், காப்பாளர்கள் (Guards), செவிலியர்கள் மற்றும் மருந்தாளர்கள் ஆகிய பதவிகளுக்காகவே இந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் ஏ. சி. கஜநாயக்க தெரிவித்தார். இது தொடர்பான மேலதிக விபரங்களையும் விண்ணப்ப முறைகளையும் சிறைச்சாலைத் துறையின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இரத்தினபுரி – பலாங்கொடை நகர சபைக்கான தேர்தல் முடிவு.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி – பலாங்கொடை சபைக்கான தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது.
இதன்படி,
கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள்,
தேசிய மக்கள் சக்தி 4833 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி 3232 வாக்குகள்
பொதுஜன பெரமுன 1442 வாக்குகள்
சுயேட்சைக் குழு 664 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 458 வாக்குகள்.


