தெல்லிப்பழை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தெல்லிப்பழை பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது , ஹெரோயின் போதைப்பொருட்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் 06 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இரத்தினபுரி – பலாங்கொடை நகர சபைக்கான தேர்தல் முடிவு.
நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் இரத்தினபுரி – பலாங்கொடை சபைக்கான தேர்தல் முடிவு தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகள், தேசிய மக்கள் சக்தி 4833 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி 3232 வாக்குகள் பொதுஜன பெரமுன 1442 வாக்குகள் சுயேட்சைக் குழு 664 வாக்குகள் ஐக்கிய தேசியக் கட்சி 458 வாக்குகள்.

