இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
IPL போட்டி நடைபெறும் இடங்களில் மாற்றம்

பஹல்காம் தாக்குதலுக்கு பதில் அளிக்கும் விதமாக இந்திய இராணுவத்தால் ‘ஒப்பரேஷன் சிந்தூர்’ தொடங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது இந்திய பாதுகாப்புப் படையினர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் 26 பயங்கரவாதிகள் உயிரிழந்ததோடு, 60இற்கும் மேற்பட்டோர்
இந்நிலையில், எல்லைப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் தர்மசாலாவில் நடைபெற இருந்த போட்டிகளின் இடங்களை மாற்றுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை தர்மசாலாவில் நடைபெற இருந்த பஞ்சாப் கிங்ஸ் (PBKS) – டெல்லி கேப்பிடல்ஸ் (DC) இடையேயான போட்டியும் வரும் 11ஆம் திகதி தர்மசாலாவில் நடைபெற இருக்கும் மும்பை இந்தியன்ஸ் (MI) – பஞ்சாப் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) இடையேயான போட்டியும் மும்பைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.