இலங்கையின் முதற்தர குழந்தைப் பராமரிப்பு வர்த்தக நாமமான பேபி செரமி, Baby Cheramy Diaper Helpdesk என்ற நாட்டின் முதல் Generative AI இனை அடிப்படையாகக் கொண்ட டயப்பர் நிபுணர் இனை அறிமுகம் செய்துள்ளது. இந்த முன்னோடி உதவிச் சேவையானது, பெற்றோரது நம்பகமான பங்காளி என்ற பேபி செரமி டயப்பர்களின் வகிபாகத்தை வலுப்படுத்துவதோடு, பெற்றோருக்கு குழந்தை டயப்பர் பராமரிப்பு குறித்த உடனடியானதும், நிபுணர்களால் உறுதிப்படுத்தபட்டதுமான வழிகாட்டுதல்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் தனிநபர் தேவைக்கேற்ப வழங்குவதன் மூலம் மொழி ரீதியான தடைகளை தகர்த்தெறிந்து, நாடு முழுவதும் உள்ள ஒவ்வொரு…
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட புதிய ரோல்ஸ் ரோய்ஸ் கார்கள்.

அண்மையில் வாகன இறக்குமதி மீதான தற்காலிக தடை தளர்த்தப்பட்டதை தொடர்ந்து அதி-சொகுசு வாகனங்கள் மீண்டும் இறக்குமதி செய்யப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி சரக்கு விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் புத்தம் புதிய ரோல்ஸ் ரோய்ஸ் Phantom Series 8 II மற்றும் BMW M3 CS வகையான வாகனங்கள் நாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இலங்கையின் சந்தை பெறுமதிக்கு அமைய ரோல்ஸ் ரோய்ஸ் Phantom Series 8 II காரின் விலை சுமார் 50 கோடி ரூபாவை தாண்டுவதாக தெரிவிக்கப்படுகிறது.