இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
ஆபரேஷன் சிந்து நடவடிக்கையில் 6-வது சிறப்பு விமானம் டெல்லி வருகை

ஆபரேஷன் சிந்து மூலமாக ஈரானில் இருந்து இந்தியர்களை வெளியேற்றும் நடவடிக்கையை வெளியுறவு அமைச்சகம் மேற்கொண்டுள்ளது.நேற்றிரவு 310 பயணிகளை அழைத்துக் கொண்டுசிறப்பு விமானம் டெல்லி விமானநிலையத்தை வந்தடைந்தது.
நள்ளிரவில் மேலும் 290 இந்தியர்களுடன் மற்றொரு விமானம் டெல்லிக்கு வந்துள்ளது. ஈரானில் இருந்து இதுவரை 1,117 பேர் மீட்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்திய மாணவர்களுடன் நேபாளம், இலங்கையைச் சேர்ந்த சிலரும் இந்தியாவால் மீட்கப்பட்டுள்ளனர். இதன் பொருட்டு நேபாளம் மற்றும் இலங்கை அரசுகள் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளன