இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தோட்டாக்களுடன் ஒருவர் கைது

பயணப்பொதியில் மறைத்து வைத்துக் கொண்டுவரப்பட்ட தோட்டாக்களுடன், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து, ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 30 வயதுடைவரே கைதாகியுள்ளார். குறித்த நபர் குவைத்தில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குவைத்தில் இருந்து கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்துக்கு வந்து, சென்னை நோக்கிப் பயணிக்கவிருந்த நிலையில் அவர் கைது செய்யப்பட்டதாக விமான நிலைய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.