இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
பாகிஸ்தானில் 5.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பாகிஸ்தானில் இன்று(ஜூன் 28) அதிகாலை நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 3.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நில அதிர்வு, மெக்னிடியூட் அளவுகோலில் 5.2 ஆகப் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தினால் கட்டிடங்கள் குலுங்கியதாகவும், உயிரிழப்புகள், சேதங்கள் குறித்த விபரங்கள் வெளியாகவில்லை எனவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பாக்கிஸ்தானில் கடந்த மதம் மட்டுமே 4.2ரிக்டர் மற்றும் 4.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
