இலங்கையில் தான் வழங்கும் நிதியியல் ஆதரவை அனைவரும் அடைவதற்கு வழிவகுப்பதற்கு தொடர்ச்சியாக உழைத்து வருகின்ற மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் அன்ட் ஃபைனான்ஸ் பிஎல்சி, தனது 80வது கிளையை சமீபத்தில் அழகிய நுவரெலியா நகரில் திறந்து வைத்துள்ளது. புகழ்பூத்த நுவரெலியா கிரான்ட் ஹோட்டலுடனான உறவு காரணமாக, இக்கிளையை திறந்து வைத்துள்ளமை மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்திற்கு மிக முக்கியமான ஒரு நிகழ்வாக மாறியுள்ளது. நுவரெலியா ஹோட்டல்கள் நிறுவனத்திற்கு சொந்தமான, அதனால் இயக்கப்பட்டு வருகின்ற இந்த பிரசித்தி பெற்ற ஹோட்டல், மேர்கன்டைல் இன்வெஸ்ட்மென்ட்ஸ்…
50 குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டம் – கட்டடப்பணியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள்

ஹல்துமுல்ல, கபரகல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் இடம்பெயர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முகாம்களில் வசித்து வரும் 50 குடும்பங்களுக்காக பதுளை லுனுகல பகுதியில் வீடுகள் அமைக்கப்பட்டுவருகின்றன.
குறிப்பிட்ட வீட்டுத் திட்ட கட்டுமானப் பணியில் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தலைமையில் பல அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் அல்லது அமைச்சர் பதவிகளுக்கு அப்பால், தாம் கட்டடத் தொழிலாளிகளாக பணியாற்றுவதாக அமைச்சர் வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்; 200 ஆண்டுகளுக்கும் மேலான வரலாற்றைக் கொண்ட மலையக சமூகம், நாட்டிற்கு வெளிநாட்டு நாணய வருமானத்தை ஈட்டிக்கொடுக்க அயராது உழைத்துள்ளது, ஆனால் அவர்களுக்கு நிலத்தை சொந்தமாக்கிக் கொள்ளும் அடிப்படை உரிமை மறுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க பதவியேற்பதற்கு முன்னர் ஹட்டன் நகரில் வைத்து வழங்கிய உறுதிமொழிக்கு இணங்க, மலையக சமூகத்திற்கு முறையான வீட்டு வசதிகளை வழங்க அரசாங்கம் இப்போது செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் வித்யாரத்ன கூறினார்.