பெங்கொக்கின் மிகவும் பிரபலமான Soho Hospitality நிறுவனத்திற்குச் சொந்தமான Charcoal Tandoor Fire Grill உணவகம், இலங்கை மக்களுக்காகப் புதியதொரு அனுபவத்தை வழங்கும் நோக்குடன் கொழும்பில் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது. கொழும்பு யூனியன் பிளேஸில் அமைந்துள்ள Capitol Twin Peaks இன் 50வது மாடியில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த தனித்துவமான உணவகத்தின் நோக்கம், இலங்கையர்களுக்கு உயர்தர உணவு அனுபவத்தை வழங்குவதாகும். இலங்கையின் முன்னணி இசை ஜாம்பவான்களான பாத்திய ஜயகொடி, சந்துஷ் வீரமன் மற்றும் மெவன் குணதிலக்க ஆகியோரின் கூட்டு…
கடவுச்சீட்டு பெற்றுக்கொள்ள காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி.
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் செயற்பாடுகள் இன்று முதல் 24 மணி நேரம் ஏழு நாட்களும் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தில் கடவுச்சீட்டுகளை வழங்கும் பணி நடைபெறும் என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.
இதற்காக இன்று இரவு முதல் பத்தரமுல்ல பகுதிக்கு சிறப்பு பேருந்து சேவையும் இயக்கப்படும் என்று அமைச்சர் தெரிவித்ததோடு இதற்கு
தேவையான பணியாளர்கள் சுழற்ச்சி முறையில் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் கூறினார்.
மேலதிக சேவை பணியாளர்களுக்காக பயிற்றப்பட்ட ஊழியர்கள் மற்றும் ஓய்வுபெற்ற ஊழியர்களின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.