பிறந்து 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணை!

திருகோணமலை முத்துநகர் பகுதியில் பிறந்து 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் சீனக்குடா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

இச்சம்பவம் இன்று (11) முத்துநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

சிசு பிறந்து 42 நாட்கள் எனவும் இரவு சிசுவுக்கு பால் கொடுத்துவிட்டு படுக்கை அறையில் உறங்கிக் கொண்டு இருந்த தாய் இன்று அதிகாலை சிசுவை பார்த்த போது உயிரிழந்த நிலையில் குழந்தை இருந்ததாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் மூலம் தெரிய வந்துள்ளது. 

2 thoughts on “பிறந்து 42 நாட்களான சிசு உயிரிழந்தமை தொடர்பில் பொலிஸார் விசாரணை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *