ஐந்து பேரில் ஒருவருக்கு நீரிழிவு நோய்!

நாட்டில் ஐந்து பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது 23% முதல் 30% வரை இருப்பதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

தேசிய கண் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர் கபில பந்துதிலக்க கூறுகையில், நீரிழிவு நோயாளிகளில் மூன்றில் ஒருவர் கண் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார்.

அவர்களில் பெரும்பாலோர் 40 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்று சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

நீரிழிவுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், அவர்களில் 11% பேர் பார்வையற்றவர்களாக மாறக்கூடும் என்று சிறப்பு மருத்துவர் கபில பந்துதிலக்க கூறினார்.

நீரிழிவால் ஏற்படும் கண் நோய்களுக்கான சிகிச்சைக்காக சுகாதாரத் துறைக்கு ஆண்டுக்கு ரூ. 923 மில்லியன் செலவாகும் என்று கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *