Bogawantalawa Tea Estates PLC, the world’s first Climate Positive Tea Company, commemorated World Environment Week 2026 through a comprehensive environmental conservation and climate action campaign that brought together government institutions, schools, estate communities, employees, and environmental stakeholders in a collective effort to strengthen biodiversity conservation, ecosystem restoration, and climate resilience, throughout the country. Aligned with…
வெளிநாட்டு பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முற்பட்ட சம்பவம் ; கைதான நபருக்கு விளக்கமறியல்
திருக்கோவில் பிரதேசத்தில் சுற்றுலா வந்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொகவந்தலாவை பிரதேசத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் பொத்துவில் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் எதிர்வரும் 28 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று திங்கட்கிழமை (17) உத்தரவிட்டார்.
பொத்துவில் அறுகம்பை பிரதேசத்துக்கு அக்கரைப்பற்று பொத்துவில் பிரதான வீதி ஊடாக வீதியால் முச்சக்கர வண்டி ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணியான நெதர்லாந்து பெண் ஒருவரை கடந்த அக்டோபர் மாதம் 25 ஆம் திகதி திருக்கோவில் பிரதேசத்தில் வைத்து மோட்டார் சைக்கிளில் சென்ற ஆண் ஒருவர் இடைமறித்து அவருக்கு தனது அந்தரங்க உறுப்பை காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது தொடர்பாக குறித்த பெண் அறுகம்பே சுற்றுலா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை செய்ததையடுத்து, குறித்த நபரின் புகைப்படத்தை ஊடகங்கள் ஊடாக பொலிஸார் வெளியிட்டு அவர் தொடர்பாக தகவல் வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து குறித்த நபர் தொடர்பாக நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (16) திருக்கோவில் பொலிஸார் விசாரணையை மேற்கொண்டனர்.
25 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான பொகலந்தலாவையைச் சேர்ந்தவர் எனவும், களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேசத்தில் திருமணம் முடித்து கடந்த சில வருடமாக திருக்கோவில் பிரதேசத்தில் வாடகை வீடு ஒன்றில் குடும்பத்துடன் வாழ்ந்து வருவதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து அவர் வாடகைக்கு இருந்த வீட்டை முற்றுகையிட்ட போது அவர் அங்கு வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வெளியேறி களுவாஞ்சிக்குடி பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அங்கு சென்றபோது அவர் தலைமறைவாகியுள்ளார்.
இந்நிலையில் மருதமுனை பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலைத்துக்கு அருகில் தனது தலையை மொட்டையடித்து, தோற்றத்தை மாற்றிக் கொண்ட நிலையில் இருந்தபோது அங்கு வைத்து குறித்த நபரை கைது செய்து பொத்துவில் பொலிஸாரிடம் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் இன்று திங்கட்கிழமை (17) பொத்துவில் நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை எதிர்வரும் 28 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.