நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வரும் விசேட குற்றத் தடுப்பு மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளின் போது, நேற்று (18) மட்டும் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 309 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அத்துடன், குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 26 பேரும், நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 185 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர் சந்தேகத்தின் பேரில் மேலும் 549 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் போலீஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இச்சோதனைகள் தொடர்ந்து தீவிரப்படுத்தப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
கொழும்பில் வாகன மோசடியில் ஈடுபட்ட நபர் கைது.
கொழும்பில் வாடகைக்கு வாகனங்களை கொள்வனவு செய்து விற்பனை செய்து மோசடியில் ஈடுபட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு – அத்துருகிரிய பொலிஸார் அவரை கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் 100இற்கும் மேற்பட்ட வாகனங்களை வைத்து மோசடியில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.இந்த மோசடியை அவர் வெவ்வேறு பெயர்களை பயன்படுத்தி மேற்கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

