The new product stack brings together Binance AI, Binance AI Pro, and Binance Agent OS to help people understand financial information, turn ideas into strategies, and build on Binance During a livestreamed event held recently, Binance Co-CEO Richard Teng and VP of Product Jeff Li unveiled Binance Intelligence, an AI product stack built into the…
17 மீனவர்கள் கைது.
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 17 மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிப்ரவரி 13 முதல் 19 வரை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது மீனவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இவர்கள் கொக்கடி, நந்திக்கடல், முல்லைத்தீவு, ஆனவாசல், சின்னபாடு மற்றும் கடைக்காடு ஆகிய பகுதிகளில் வசிப்பவர்கள் என்றும், 18 முதல் 58 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கடற்படை தெரிவித்துள்ளது.
இதனுடன், 12 மீன்பிடி படகுகள், ஒரு மோட்டார் சைக்கிள், 156 சட்டவிரோத மீன்பிடி வலைகள், 184 கடலட்டைகள் மற்றும் 22 சங்கு ஓடுகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன