கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
வழமைக்கு திரும்பும் இலங்கை – தமிழகம் நோக்கி நகரும் ஆபத்து
டிட்வா புயல் தற்போது சுண்டிக்குளத்தில் மையம் கொண்டு கடலுக்குள் சென்று கொண்டிருக்கின்றது. தற்போது (காலை 8.00 மணி)மையத்தின் 30% மான பகுதி கடலுக்குள் சென்றுள்ளது.
இன்று நண்பகலளவில் முழுமையாக கடலுக்குள் சென்று விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக பேரழிவுகளை ஏற்படுத்திய டிட்வா புயல் இன்றுடன் முழுமையாக இலங்கையை விட்டு விலகும்.
இன்றும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கு மிதமானது முதல் சற்று கனமான மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக வடக்கு மாகாணத்தின் மேற்கு பகுதிகள் சற்று கனமான மழையைப் பெறும் வாய்ப்புள்ளது.
வடக்கு மாகாணத்தின் குளங்களுக்கு இன்றும் அதிக நீர்வரத்து இருக்கும். ஆகவே பெருநிலப்பரப்பின் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் அவதானமாக இருப்பது அவசியம்.
வடமேல் மாகாணம் இன்று கனமழை யைப் பெறும் வாய்ப்புள்ளது.
மத்திய மற்றும் மேல் மாகாணத்தின் ஒரு சில பகுதிகளுக்கு மிதமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது.
நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு வானிலை இன்று படிப்படியாக சீரடையும்.
நாகமுத்து பிரதீபராஜா (29.11.2025 சனிக்கிழமை காலை 8.00 மணி)