அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தொடர்பில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த தினத்தில் சந்தேக நபரை அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்.

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அத்துடன் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் நாளை மறுதினம்(வெப்ரவரி 24) முதல் சில தினங்களுக்கு மழையுடனான வானிலை அதிகரித்துக் காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார்.
காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் சிறிதளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய வாய்ப்புக் காணப்படுவதாகவும், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சீரான வானிலை நிலவக்கூடும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய, சப்ரகமுவ, மேல்,வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் குருநாகல் மாவட்டத்திலும் காலை வேளையில் பனி மூட்டம் காணப்படும்.
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.