கொழும்பு, செவ்வாய், 25 ஆகஸ்ட் 2026: இலங்கையின் பெருந்தோட்டத் துறையில் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவத்தை மறுவரையறை செய்யும் வகையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கழிவு மறுசுழற்சி, சமூக வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தலவாக்கலை டீ எஸ்டேட்ஸ் பிஎல்சி நிறுவனத்திற்குச் சொந்தமான ரதெல்லையில் உள்ள சமர்செட் தோட்டத்தில் சமர்செட் சுற்றுச்சூழல் பொருள் சேகரிப்பு மற்றும் பதப்படுத்தும் நிலையம் (MCPC) நிறுவப்பட்டுள்ளது. இலங்கையில் ‘முறசாரா கழிவு முகாமைத்துவத்தில் பெண்கள் மற்றும் இளைஞர்களின்…
ஹம்பேகமுவ மற்றும் ஹல்துமுல்ல பகுதிகளில் பாரிய கஞ்சா வேட்டை : 3 பேர் கைது!
ஹம்பேகமுவ – சிரிபுர வனப்பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கஞ்சா தோட்டம் ஒ்ன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இரண்டு சந்தேகநபர்கள் ஹல்துமுல்ல பொலிஸாரால் நேற்று வியாழக்கிழமை (22) கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுற்றிவளைப்பில் சுமார் 12,580 கஞ்சா செடிகள் கைப்பற்றப்பட்டு, சான்றுகளாக மாதிரிகளை எடுக்கப்பட்ட பின்னர், தீ வைத்து அழிக்கப்பட்டன.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஹம்பேகமுவ பகுதியைச் சேர்ந்த, 51 மற்றும் 63 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹம்பேகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.