Hayleys Mobility Limited, the mobility arm of Hayleys Fentons Limited, has introduced the all-new JAECOO J5 HEV, broadening its range of high-performance hybrid SUVs to meet the evolving demands of Sri Lanka’s growing new-energy vehicle market. Designed to meet the needs of modern drivers, the JAECOO J5 HEV combines intelligent hybrid performance, advanced safety features,…
INSEE சங்ஸ்தா சீமெந்து, SLIM Kantar மக்கள் விருதுகள் 2026இல் தொடர்ந்து 15ஆவது தடவையாக வெற்றி பெற்று நுகர்வோரின் அசைக்க முடியாத நம்பிக்கையை கொண்டாடுகிறது
SLIM Kantar மக்கள் விருதுகள் 2026இல் மீண்டும் ஒரு முறை INSEE சங்ஸ்தா சீமெந்து, ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற வீடமைப்பு மற்றும் கட்டுமான வர்த்தக நாமமாக முடி சூடி தொடர்ச்சியாக 15 தடவைகள் இவ்விருதை வென்று, முன்னெப்போதும் இல்லாத மைல்கல்லை எட்டியுள்ளது.
இந்த மகத்தான சாதனை, இலங்கையின் வீடமைப்பு மற்றும் கட்டுமானத் துறையில் நிறுவனத்தின் நாமத்தின் நீடித்த தலைமைத்துவத்தை வெளிப்படுத்துகின்றது. மேலும், பல தலைமுறைகளாக கட்டிடத் தொழிலாளர்கள், ஒப்பந்தக்காரர்கள், மேசன்கள், பொறியியலாளர்கள் மற்றும் வீட்டு உரிமையாளர்கள் சங்ஸ்தாவைத் தங்களின் நம்பகமான சீமெந்து வர்த்தக நாமமாகத் தொடர்ந்து தேர்ந்தெடுப்பதில் கொண்டுள்ள நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
இலங்கையில் 55 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வணிகப் பாரம்பரியத்தைக் கொண்டுள்ள ஒரே உள்நாட்டு வர்த்தக நாமமாக INSEE சங்ஸ்தா திகழ்கின்றது. இது புத்தாக்கம், நிலைபேறாண்மை மற்றும் தரம் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன் தொடர்ந்து தொழில்துறை தரநிலைகளை நிர்ணயித்து வருகிறது. இது பல்வேறு கட்டுமானப் பயன்பாடுகளுக்கு மேம்பட்ட வலிமையையும் நிலைத்தன்மையையும் வழங்கும் Portland Composite Cementஐ (PCC) நாட்டில் முதன்முதலில் அறிமுகப்படுத்திய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையின் ஒரே முழுமையான ஒருங்கிணைந்த சீமெந்து உற்பத்தியாளராக INSEE சங்ஸ்தா, மேம்பட்ட தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தல், சுற்றுச்சூழல் தயாரிப்பு அறிவிப்புக்களை (Environmental Product Declarations) அடைதல் மற்றும் 5-நட்சத்திர பசுமை முத்திரை சான்றிதழைப் பெறல் ஆகியவற்றின் மூலம் தொழில் தரநிலைகளில் முன்னோடியாகத் திகழ்கிறது.
National Cleaner Production Centreஇடமிருந்து (NCPC) ‘EcoLabel’ சான்றிதழைப் பெற்ற இலங்கையின் முதல் சீமெந்து நிறுவனமாக INSEE சங்ஸ்தா திகழ்வது குறிப்பிடத்தக்கது. இவ் அங்கீகாரங்கள், நிலைத்தன்மைக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பையும், நாட்டின் கட்டுமானத் துறையின் எதிர்காலத்தை வடிவமைப்பதில் அதன் பங்களிப்பையும் எடுத்துக்காட்டுகின்றன.
INSEE சீமெந்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான துசித் குணவர்ணசூரிய இது தொடர்பாகக் கருத்து தெரிவிக்கையில், “தொடர்ந்து 15ஆவது தடவையாக ‘ஆண்டின் மக்கள் அபிமானம் வென்ற வீடமைப்பு மற்றும் கட்டுமான வர்த்தக நாம’ விருதை வென்றிருப்பது, INSEE சங்ஸ்தா மீது இலங்கை மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு கிடைத்த வலிமையான அங்கீகாரமாகும். சமூகங்கள் மற்றும் தொழில்துறை பங்காளர்களுடன் இணைந்து நாட்டின் முன்னணி சீமெந்து வர்த்தக நாமமாகவும் நிலையான கட்டுமானம் மற்றும் தேசிய முன்னேற்றத்தின் ஆதரவாளராகவும் நாங்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளோம். இக் கௌரவம், தொடர்ந்து சிறப்பான சேவையை வழங்கவும், தேசிய வளர்ச்சிக்கு பங்களிக்கவும், இலங்கைக்கு வலிமையான எதிர்காலத்தை உருவாக்கவும் எங்களை ஊக்குவிக்கிறது.” என்றார்.
இவ் விருதுகளில் INSEE சங்ஸ்தாவின் தொடர்ச்சியான வெற்றியானது, தரம், நம்பகத்தன்மை மற்றும் புதுமை ஆகியவற்றில் அதன் இணையற்ற நற்பெயரை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. பல ஆண்டுகளாக, நிறுவனம் நிலையான கட்டுமானத் தீர்வுகள் மூலம் நாட்டின் வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ஆதரவளித்து, நம்பிக்கையின் மறுபெயராக மாறியுள்ளது.
மக்களின் குரலாகப் பரவலாகக் கருதப்படும் SLIM Kantar மக்கள் விருதுகள், இலங்கை நுகர்வோரிடம் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தும் வர்த்தக நாமங்களைக் கொண்டாடுகின்றன. Kantar நாடு முழுவதும் மேற்கொள்ளும் விரிவான ஆய்வின் அடிப்படையில், நுகர்வோர் தெரிவை பிரதிபலிக்கும் வகையில் வெற்றியாளர்கள் தெரிவு செய்யப்படுவது இவ்விருதுகளின் சிறப்பம்சமாகும்.
